Friday, June 2, 2017

current Affairs May 31

சண்முகம்  IAS  அகாடமி 
நடப்பு நிகழ்வுகள் 


  1. ஐ.ஐ.டி காரக்பூரில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மலிவான, விரைவான மற்றும் மாசுபடுத்தாத உயிரி எரிபொருளை உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். 
  2. முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் பிரபல இயக்குநர் தாசரி நாராயண ராவ் ஹைதராபாத்தில் காலமானார்.
  3. மே 31 - உலக புகையிலை பயன்படுத்தா தினம்.
  4. முதன் முறையாக கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கு எதிரான பாதுகாப்பு முறைமையை வெற்றிகரமாக சோதித்தது அமெரிக்கா
  5.  உத்தரப்பிரதேசத்தில் அரசு மருத்துவர்களின் ஓய்வூதிய வயதை 60 லிருந்து 62 ஆண்டுகள் வரை உயர்த்தியது.  
  6. 21 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமி போன்ற கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், அதன் மேற்பரப்பில் திரவ நீரைக் கொண்டிருக்கிறது
  7. 2017 இந்திய மொபைல் காங்கிரஸ் (India Mobile Congress ) செப்டம்பர் மாதம் புது தில்லியில் நடைபெறுகிறது . சீனாவுக்குப் அடுத்தபடியாக இந்திய தொலைதொடர்பு சந்தை உலகிலேயே இரண்டாவது மிகப்பெரியதாகும்.
  8. இந்திய ரிசர்வ் வங்கி புதிய ஒரு ரூபாய் நோட்டு இந்திய அரசாங்கத்தால் அச்சிடப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
  9. ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியர் - விராத் கோஹ்லி
  10. பெண்கள் பணிபுரியும் நாடுகள் தரவரிசையில் 131 நாடுகளில் இந்தியா 120 வது இடத்தில் உள்ளது.  உலகின் மூன்றாவது பெரிய விமானச் சந்தையாக இந்தியா விளங்குகிறது.
  11. தில்லி போலீசார் மிதிவண்டி மூலம் ரோந்து செல்வதை தொடங்கிவைத்தனர் .புவி அறிவியல் அமைச்சகம் 2018 ஜனவரியில் \'ஆழ்கடல் மிஷன்\' எனும் ஆராய்ச்சியை துவக்குகிறது
  12. குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (ஜி.சி.எம்.எம்.எஃப்), செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீவனம் அளவிடல் மதிப்பீடுக்காக இஸ்ரோவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  13. புகையிலை கட்டுப்பாட்டை பொறுப்புணர்வுடன் மேற்கொண்டதற்க்காக மத்திய சுகாதார அமைச்சர் ஜே பி நட்டாவுக்கு உலக சுகாதார அமைப்பின் சிறப்பு விருது வழங்கப்பட்டது .
  14. கிரீஸின் முன்னாள் பிரதம மந்திரி கான்ஸ்டன்டைன் மிட்சோதகிஸ் 98 வது வயதில் காலமானார் .
  15. தங்கத்தை அதிகமாக வாங்கிக் குவிக்கும் இந்திய மாநிலம் - கேரளா
  16. மணிப்பூர் மாநில சட்டமன்றம் பந்த் போன்ற அனைத்து தடைகளையும் சட்டவிரோதமாக அறிவித்து புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது.
  17. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி, மும்பையில் எட்டு சாலை இணைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை எளிதாக சென்றடைய உதவும் .
  18. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். தலைவர் - பேராசிரியர் ராம் ஷங்கர் கத்தெரியா துணைத்தலைவர் - l . முருகன்
  19. இந்தியா மற்றும் ஸ்பியினுக்கு இடையில் புதிதாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சைபர் பாதுகாப்பில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலில் கையழுத்தாகியது. புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தியில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டாவதாக கையெழுத்தாகியது. உடலுறுப்புகள் மாற்றுசிகிச்சைகள், இந்திய வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் ஸ்பெயின் டிப்ளொமாட்டிக் அகாதமி, சிவில் வான்வழி போக்குவரத்து ஆகியவற்றில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை மாற்றம் செய்தல் மற்றும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா வழங்குதல் ஆகியவற்றுக்கு இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மேலும் படிக்கச் கிளிக் செய்யவும் http://tamilcurrentaffairs.shanmugamiasacademy.in/